முகப்பு அண்மை செய்திகள் விரைவில் சினிமாவை விட்டு விலகிடுவேன் – விஜய் பட இயக்குனர்

விரைவில் சினிமாவை விட்டு விலகிடுவேன் – விஜய் பட இயக்குனர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் தமிழ் சினிமாவில் ‘அவியல்‘ என்ற படத்தின் மூலம் இளம் இயக்குனராக அறிமுகமானவர். இப்படத்தை தொடர்ந்து ‘மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்‘ என தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களை இயக்கி வருகிறார்.

இப்படங்கள் அனைத்தும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை  பெற்றது. இந்நிலையில் இவர் தற்போது நடிகர் விஜய்யை வைத்து ‘லியோ‘ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்காக ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தது, அடுத்து சென்னையில் நடைபெற்று வருகிறது. தற்போது படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது. அதற்கான அறிவிப்பும் வெளியாகியது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 20 வருடங்களுக்கு மேலாக படங்கள் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை, ஒரு 10 படங்களை இயக்கிவிட்டு நான் சினிமாவில் இருந்து விலகிவிடலாம் என கூறியுள்ளார். லோகேஷ் கனகராஜ் கூறிய இந்த விஷயம் ரசிகர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version