இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘மரகத நாணயம்‘. இதில் ஹீரோவாக நடிகர் ஆதி நடித்திருந்தார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.
இப்படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பை பெற்றது. ஃபேண்டஸி காமெடி படமாக உருவான இப்படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற ‘நீ கவிதைகளா…‘ பாடல் இன்று வரை இளைஞர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி இந்த பாகத்தை தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் ஹீரோ மற்றும் ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.
