முகப்பு அண்மை செய்திகள் ஓடிடி-யில் வெளியாகும் ‘போர் தொழில்‘

ஓடிடி-யில் வெளியாகும் ‘போர் தொழில்‘

இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த ஜூன் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘போர் தொழில்‘. இப்படத்தில் நடிகர் சரத்குமார், நிகிலா விமல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். அப்ளாஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை பார்த்துவிட்டு திரைபிரபலங்கள் பலரும் பாராட்டி வந்தனர்.

சமீபத்தில் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழு ரசிகர்கள் முன் கேக் வெட்டி கொண்டாடினர். ‘போர் தொழில்‘ திரைப்படம் உலகம் முழுவதும் 50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ‘போர் தொழில்‘ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் ஆகஸ்ட் 4-ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version