முகப்பு அண்மை செய்திகள் விஜய் டிவியின் பிரபல சீரியலுக்கு வந்த சோதனை

விஜய் டிவியின் பிரபல சீரியலுக்கு வந்த சோதனை

தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியலுக்கு மக்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு உண்டு. மக்கள் பலரும் படங்களை விட சீரியல் பார்ப்பதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

இந்நிலையில் குடும்ப பாங்கான கதை, நகைச்சுவை, பக்தி நாடகங்கள் என தரமான சீரியல்களை எடுத்துக்கொண்டிருந்த தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்று டிஆர்பி-க்காக கண்டதையும் கதையாக எடுத்து வருகின்றனர்.

வேற்று மொழி சேனல்களின் சீரியல்களை காப்பி பேஸ்ட் செய்து வருவதுடன் அதில் வருவது போலவே க்ளாமர், ரொமான்ஸ் காட்சிகளையும் தமிழ் சீரியல்களிலும் அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ‘ஈரமான ரோஜாவே 2‘ சீரியலில் முதலிரவு காட்சி, முத்தக்காட்சிகளை ஒளிபரப்பியுள்ளனர்.

இதற்கு பலதரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை குடும்பமாக பார்க்கும் ஒரு தொலைக்காட்சி தொடரில் இதையெல்லாம் காட்ட வேண்டுமா? இனி சீரியலுக்கும் சென்சார் தேவையா? என்று நெட்டிசன்கள் பலரும் திட்டி வருகின்றன.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version