முகப்பு அண்மை செய்திகள் மீண்டும் திரையில் வெளியாகும் கமலின் படம்

மீண்டும் திரையில் வெளியாகும் கமலின் படம்

கடந்த 2006-ம் ஆண்டில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு‘. இவருக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் கமலானி முகர்ஜி என 2 நடிகைகள் நடித்திருந்தனர்.

மேலும் இவர்களுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை செவந்த் சேனல் தயாரித்த நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார். இப்படத்திலிருந்து வெளியான அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது.

இதில் போலீஸ் அதிகாரியாக ராகவன் என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் கமல். இப்படம் அன்றைய காலக்கட்டத்தில் மாபெரும் வெற்றியை பெற்றது.

இந்நிலையில் தற்போது இந்தப்படத்தை மீண்டும் தமிழகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். வரும் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவித்து, டி.சி.பி.ராகவன் இஸ் பேக் என்று புதிய போஸ்டர் உடன் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version