முகப்பு அண்மை செய்திகள் ‘வடசென்னை-2‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

‘வடசென்னை-2‘ படத்தின் புதிய அப்டேட் வெளியீடு

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான படம் ‘வடசென்னை‘. இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தனர்.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குமாறு தனுஷின் ரசிகர்கள் தொடர்ந்து வெற்றிமாறனுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது ‘வடசென்னை-2‘ படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அதில், “ வடசென்னை படத்தில் ராஜன் என்ற கதாபாத்திரத்தை மையப்படுத்தி ராஜன் வகையறா என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகத்தை இயக்கி வெளியிடுவதற்கு தயாராக வைத்திருக்கிறார் வெற்றிமாறன். இப்படம் தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக கண்டிப்பாக இருக்கும். அந்த படத்தை அவர் சீக்கிரமே வெளியிட வேண்டும் “ என்றும் சந்தோஷ் நாராயணன் கூறியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version