முகப்பு அண்மை செய்திகள் பிரபல நட்சத்திர ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

பிரபல நட்சத்திர ஜோடிக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது

தெலுங்குத் திரையுலகத்தின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகன் வருண் தேஜ். இவரும் தெலுங்கில் தற்போது இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அவருக்கும், தமிழில் ‘பிரம்மன்‘ படத்தில் நடித்த நடிகை லாவண்யா திரிபாதிக்கும் இடையில் காதல் என கடந்த சில மாதங்களாவே செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையில் இருவரின் வீட்டாரும் திருமணம் குறித்து பேச்ச வார்த்தை நடத்தி முடித்ததாகவும் சொன்னார்கள். இந்நிலையில் நேற்று இரவு தனது சமூக வலைத்தளத்தில் லாவண்யாவுடன் இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்து ‘எனது காதலைக் கண்டுபிடித்தேன்‘ என வருண் தேஜ் பதிவிட்டுள்ளார்.

நேற்று இரவு ஹைதராபாத்தில் உள்ள வருண் வீட்டில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதற்குப் பிறகே இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் வருண் தேஜ். அதற்கு மறுபதிவு செய்து, “ 2016 முதல் என்றென்றைக்கும், எனக்கானவரைக் கண்டுபிடித்தேன்“ என லாவண்யா திரிபாதி பதிவிட்டுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் குடும்பத்தினர் என நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version