முகப்பு அண்மை செய்திகள் லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட நடிகர் லாரன்ஸ்…!

லோகேஷ் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட நடிகர் லாரன்ஸ்…!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். கடைசியாக இவர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்‘ திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்திருப்பார்.

இவர் நடித்திருந்த சந்தனம் ரோலில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் நடிகர் ராகவா லாரன்ஸ் தான் என்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்நிலையில் இது குறித்து பேசிய ராகவா லாரன்ஸ், “நான் தான் விஜய் சேதுபதி நடித்திருந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தேன். ஆனால் கால் ஷிட் இல்லாத காரணத்தால் நடிக்க முடியாமல் போனது. தற்போது நான் மீண்டும் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க போகிறேன்“ என்று ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version