முகப்பு அண்மை செய்திகள் ’லியோ’ பட புதிய அப்டேட்: விஜய்யுடன் இணையும் பிக்பாஸ் நடிகை

’லியோ’ பட புதிய அப்டேட்: விஜய்யுடன் இணையும் பிக்பாஸ் நடிகை

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ‘ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து இதன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வரும் நிலையில் விஜய்யுடன் இணைந்து சஞ்சய் தத், கவுதம் மேனன், திரிஷா, பிரியா ஆனந்த் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது ‘லியோ‘ படப்பிடிப்பில் பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக பங்கேற்ற அபிராமி வெங்கடாசலமும் இணைந்திருக்கிறார். இதனை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தான் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு ‘லியோ‘ படத்தில் தான் நடிப்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார் நடிகை அபிராமி. மேலும் இவர் ஏற்கனவே அ.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை‘ மற்றும் மாதவன் இயக்கி நடித்த ‘தி ராக்கெட்ரி‘ உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version