நடிகர் கமல்ஹாசன் சென்னையில் புத்தக விற்பனை நிலையத்தை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “அரசியலையும், கலாச்சாரத்தையும் தனித்தனியாக வைத்திருக்கக் கூடிய சூழ்நிலையில் நாம் இருக்கிறோம். நாம் உருவாக்கியது தான் அரசியல். ஆள்பவர்கள் என்ற வார்த்தையே இருக்கக்கூடாது என நினைக்கிறேன். ‘நாம் நியமித்தவர்கள் அவர்கள்‘ என்ற எண்ணம் மக்களுக்கு வரும்போது ஜனநாயகம் நீடூழி வாழும். ஒவ்வொருவரும் தன்னளவில் தலைவன் என்று நினைக்கும் பட்சத்தில் இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயகமாக மாறும். என்னுடைய முக்கியமான அரசியல் எதிரி என்பது சாதி. 21 வயதிலிருந்தே நான் இதனை சொல்லிக் கொண்டிருக்கிறேன்.
தற்போது அதனை பலமான வார்த்தைகளில் சொல்லும் பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. சாதியை அரசியலில் இருந்து நீக்க வேண்டும் என்பதை அனைவரும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நடந்தபாடில்லை“ என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
