முகப்பு அண்மை செய்திகள் ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் வீடியோ

ரசிகர்களுடன் இணைந்து படம் பார்த்த சிவகார்த்திகேயன் – வைரலாகும் வீடியோ

இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து தற்போது வெளியாகியுள்ள படம் ‘மாவீரன்‘. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இன்று சர்வதேச அளவில் அனைத்து திரையரங்குகளிலும் ‘மாவீரன்‘ படம்  வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் சிறப்பான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகள் மற்றும் பாடி ஷேமிங் காமெடிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஒரு சில ரசிகர்கள் விமர்சனங்களை வைத்துள்ளனர்.

இதுபோன்ற படத்தை மடோன் அஸ்வினிடம் எதிர்பார்க்கவில்லை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. படம் விஷுவல் ட்ரீட்டாக அமைந்துள்ளதாகவும் பேன்டசி படமாக சிறப்பாக அமைந்துள்ளதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘பிரின்ஸ்‘ மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் வெளியான நிலையில் பெரும் தோல்வியடைந்தது. இந்நிலையில், இந்தப் படம் சிறப்பாக அமைய வேண்டும் என்று சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. குறிப்பாக படத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் இணைந்து பாடியிருந்த ‘வண்ணாரப்பேட்டையிலே‘ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக இணந்துள்ளார்.

படத்தின் வெற்றிக்கு அவரது கெட்டப் மற்றும் உடல்மொழி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தில் நடிகை சரிதா நடித்துள்ளார். இவர்களது கேரக்டர்கள் குறித்தும் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். முன்னதாக படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய இவர்கள் இருவரும் சிவகார்த்திகேயனை குட்டி ரஜினிகாந்த் என்று பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தினம் படம் வெளியாகியுள்ள நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர்களுடன் இணைந்து முதல் நாள் முதல் ஷோவை வெற்றி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார். முன்னதாக அவருக்கு ரசிகர்கள் உற்சாகமான வரவேற்பை கொடுத்திருந்தனர். இந்த வீடியோ வெளியாகி தற்போது சோஷியல் மீடியாவில் மாஸ் காட்டி வருகிறது. வழக்கம்போல தலையில் குல்லாவுடன் அவர் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version