முகப்பு சினிமா மீண்டும் படம் இயக்குவதில் களமிறங்கிய நடிகர் ‘தனுஷ்‘

மீண்டும் படம் இயக்குவதில் களமிறங்கிய நடிகர் ‘தனுஷ்‘

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான தனுஷ் இதற்கு முன்பு ‘ப.பாண்டி‘ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அப்படத்திற்கு பிறகு ‘நாகார்ஜுனா‘, ‘எஸ்ஜே சூர்யா‘, ‘சரத்குமார்‘, ‘ஸ்ரீகாந்த்‘, ‘அதிதி ராவ் ஹைதரி‘ ஆகியோருடன் அவரும் நடிக்க ஒரு படத்தை  இயக்க ஆரம்பித்தார். ‘நான் ருத்ரன்‘ எனப் பெயரிடப்போவதாக சொல்லப்பட்ட அந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நின்று போனது.

சரித்திரப் படமாக உருவான அந்தப் படத்தை கடந்த வருடமே மீண்டும் ஆரம்பிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால், இதுவரை ஆரம்பிக்கவில்லை. இந்நிலையில் தனுஷ் அடுத்து இயக்க உள்ள ஒரு படம் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. ‘எஸ்ஜே சூர்யா‘, ‘விஷ்ணு விஷால்‘ ஆகியோருடன் தனுஷ் நடித்து இயக்க உள்ள ஒரு படம் விரைவில் ஆரம்பமாக உள்ளதாம். அது குறித்து பேச்சு வார்த்தைகளும் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்பு வரலாம் என்றும் தெரிகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version