முகப்பு அண்மை செய்திகள் ‘பத்து தல‘ படத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரிய பவானி சங்கர்

‘பத்து தல‘ படத்தின் புகைப்படங்களை பகிர்ந்துள்ள பிரிய பவானி சங்கர்

‘வெந்து தணிந்தது காடு‘ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பத்து தல‘. இப்படத்தில் ‘கவுதம் கார்த்திக்‘ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக ‘பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் டீஜே அருணாச்சலம், கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டடித்த ‘முப்தி‘ படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பு நிறைவுபெற்று மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் பத்து தல படத்தின் டப்பிங்கை ஒவ்வொருவராக முடித்து வருகின்றனர். சமீபத்தில் ‘கவுதம் கார்த்திக்‘ டப்பிங்கை முடித்தார். இப்போது ‘பிரியா பவானி சங்கர்‘ டப்பிங்கை நிறைவு செய்துள்ளார். இந்த தகவலை அவர் தனது சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version