மலையாள சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் வெளியான ‘நேரம்‘, ‘பிரேமம்‘ போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ‘கோல்ட்‘ திரைப்படம் தோல்வியை தழுவியது. நெட்டிசன்கள் அல்போன்ஸை விமர்சித்தனர்.
அதற்கு அவரும் கடுமையான சில பதில்கள் கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்த நிலையில் நேற்று அல்போன்ஸ் புத்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ‘அடுத்து நான் ஒரு தமிழ் படம் இயக்கப் போகிறேன் என்றும், மேலும் அந்த படத்தை என் பழைய நண்பர் மற்றும் தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார்‘ என்றும் பதிவிட்டுள்ளார். விரைவில் இப்படம் பற்றிய முழு அறிவிப்பும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது.
