முகப்பு அண்மை செய்திகள் ‘பத்து தல‘ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதற்கு நடிகை சாயிஷாவிற்கு இவ்வளவு சம்பளமா…!

‘பத்து தல‘ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியதற்கு நடிகை சாயிஷாவிற்கு இவ்வளவு சம்பளமா…!

 

ஆர்யாவின் மனைவியான நடிகை சாயிஷா சிம்புவின் ‘பத்து தல‘ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இவர் தமிழில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக ‘வனமகன்‘ படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் ஆர்யாவுடன் இணைந்து ‘கஜினிகாந்த்‘ என்ற படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் காதலித்து 2019-ம் ஆண்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட சாயிஷா, சிம்புவின் ‘பத்து தல‘ படத்தில் ஏஆர் ரகுமான் இசையில் உருவான ராவடி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

இந்த பாடலில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து கவர்ச்சி தூக்கலாக ஆட்டம் போட்டு இருக்கிறார். சாயிஷா இந்த ஒரு பாடலுக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே நடிகை சமந்தா ‘புஷ்பா‘ படத்தில் இடம்பெற்ற ‘ஓ சொல்றியா மாமா‘ என்ற பாடலுக்கு நடனம் ஆடி பல கோடிகளை சம்பளமாக பெற்ற நிலையில் சாயிஷாவும் அதே போன்ற கெட்டப்பில் ‘பத்து தல‘ படத்தில் ஆட்டம் போட்டிருப்பதால் அவருக்கும் சம்பளம் அதிகமாக இருக்கும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால் சாயிஷா இந்த ஒரு பாடலுக்காக வெறும் 40 லட்சம் மட்டுமே சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

இந்நிலையில் சாயிஷாவிடம் சோஷியல் மீடியாவில் எதற்காக இப்படி ஒரு ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறீர்கள்? என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்ததால், அதற்கு பதில் அளிக்கும் விதமாக சாயிஷா, “எனக்கு பிடித்தமான விஷயத்தை செய்வதில் எப்போதும் நான் தயக்கம் காட்டியதில்லை. டான்ஸ் என்பது சிறுவயதில் இருந்தே மிகவும் பிடிக்கும். அதை செய்ததில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை“ என்று நடிகை சாயிஷா அதிரடியாக பதில் அளித்துள்ளார்.

 

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version