தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ‘துணிவு‘ நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து தற்போது ‘விடாமுயற்சி‘ படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை ‘தடையறத் தாக்க, கலக தலைவன், தடம்‘ படங்களை இயக்கிய இயக்குனர் மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார். சில விஷயங்கள் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. இந்த மாதம் இறுதிக்குள் ‘விடாமுயற்சி‘ படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்திற்காக தனது உடல் எடையை குறைத்து கெட்டப்பை மாற்றியுள்ளார் அஜித்.
இந்நிலையில், ‘விடாமுயற்சி‘ திரைப்படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான முயற்சியும் நடந்து வருகிறது.
கடந்த 2010-ம் ஆண்டு வெளிவந்த ‘அசல்‘ திரைப்படத்தில் தான் கடைசியாக அஜித் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து 13 ஆண்டுகளுக்கு பின் தற்போது ‘விடாமுயற்சி‘ திரைப்படத்தில் தான் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
