முகப்பு அண்மை செய்திகள் இப்படியும் ஒரு பண்டிகை…. பெண்கள் ஆண்களை குச்சியால் தாக்கும் ‘லாத்மர்’!

இப்படியும் ஒரு பண்டிகை…. பெண்கள் ஆண்களை குச்சியால் தாக்கும் ‘லாத்மர்’!

மதுராவில் ‘லாத்மர்’ ஹோலி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

உத்தரபிரதேசம் மாநிலம், மதுராவின் பர்ஸானாவில்  உள்ள ராதை கோயிலில் ஆண்டுதோறும் ‘லாத்மர்’ ஹோலி கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், பாரம்பரியத்தைக் கடைப்பிடித்து ராதை போல் வேடமிட்டு வந்த பெண்கள், கேடயங்களை வைத்திருக்கும் ஆண்களை குச்சியால் அடித்து விளையாடினர். பின்னர் வண்ணங்களைப் பூசியும், ஆடி, பாடியும் மகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து, இல்லத்தில் தயாரிக்கப்பட்ட இனிப்புகளை வழங்கி ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இது தான் சரியான நேரம் என்று நினைத்து கணவரைப் போட்டு தாக்கும் பெண்களை பார்த்து அங்கிருந்தவர்கள் சிரித்து ஆரவாரம் செய்தனர். இது தொடர்பான வீடியோ, ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version