நடிகை சமந்தா தற்போது ‘சாகுந்தலம்‘ படத்தை முடித்துவிட்டு தெலுங்கில் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து ‘குஷி‘ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். மேலும், ‘யசோதா‘ படத்தின் டப்பிங் பணியில் இருந்தபோது தனக்கு மயோசிட்டிஸ் என்ற நோய் பாதிப்பு இருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
அதன் காரணமாகவே சில மாதங்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் தற்போது தான் ஜிம்மில் தீவிரமாக ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தனக்கு இருந்த மயோசிட்டிஸ் பிரச்சனை குறித்து ஒரு தகவல் தெரிவித்து இருந்தார்.
அதாவது, இன்னும் மயோசிட்டிஸ் நோயிலிருந்து முழுமையாக தான் விடுபடவில்லை என்றும் , முன்பை விட எனது உடல் நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் நடிகை சமந்தா தெரிவித்துள்ளார். அதனால் மிக விரைவில் இந்த நோயிலிருந்து நான் முழுமையாக விடுபட்டு விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் நடிகை சமந்தா நம்பிக்கையுடன் தெரிவித்து இருக்கிறார்.
