முகப்பு அண்மை செய்திகள் பொதுமக்களுக்கு புத்தகத்தை தானமாக வழங்கும் நடிகர் சரத்குமார்…!

பொதுமக்களுக்கு புத்தகத்தை தானமாக வழங்கும் நடிகர் சரத்குமார்…!

நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் தன்னிடம் இருந்த சுமார் 6 ஆயிரம் புத்தகங்களை தானமாக வழங்கி வருகிறார். தனது வீட்டின் முன்னால் தினமும் சில நூறு புத்தகங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கிறார். அதனை பொதுமக்கள் பார்த்து தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நான் படித்த எனக்கு அன்பளிப்பாக வந்த மற்றும் என் தந்தையார் எனக்காக விட்டு சென்ற சுமார் 6 ஆயிரம் புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட, அதை பிறருடன் பகிர்ந்து கொள்வது தான் அதிகமான மகிழ்ச்சி தரும் என்று எண்ணினேன்.

இந்த புத்தகங்களில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்களை பிறரும் படித்து பயன்பெற வேண்டும் என்கிற அடிப்படையில் இலவசமாகவே வீட்டின் வெளியில் இந்த புத்தகங்களை வைத்திருக்கிறேன். புத்தக வாசிப்பை அதிகப்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன்“ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version