தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை நமீதா. இவர் தற்போது திருமணம் குழந்தை என குடும்பத்தில் தனது முழு நேரத்தை செலவிடுவதால் சினிமாவை விட்டு விலகியுள்ளார். மேலும் முழுக்க முழுக்க குழந்தைகளை பார்த்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “நாம் எல்லோரும் டிசம்பர் 31-ம் தேதியே புத்தாண்டாக கொண்டாடுகிறோம். அது நம் கலாச்சாரம் கிடையாது.
ஏப்ரல் 14-ம் தேதியே தமிழ் புத்தாண்டு, அது தான் நம் கலாச்சாரம். அந்நாளில் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாடுங்கள். கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெறுங்கள். டிசம்பர் 31-ம் தேதி நமக்கான புத்தாண்டு கிடையாது. ஏப்ரல் 14-ம் தேதியே நாம் கொண்டாட வேண்டிய புத்தாண்டு“ என்று நடிகை நமிதா கூறியுள்ளார்.
