முகப்பு அண்மை செய்திகள் பேத்தியின் பெயரை அறிவித்த நடிகர் சிரஞ்சீவி

பேத்தியின் பெயரை அறிவித்த நடிகர் சிரஞ்சீவி

தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் ஆவார். நடிகர் ராம்சரணும் தற்போது  இந்திய திரையுலகின் முன்னணி நடிகராக உயர்ந்து இருக்கிறார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு உபாசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி 11 ஆண்டுகள் ஆன நிலையில் ராம் சரண்-உபாசனா தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் ராம் சரண்-உபாசனா தம்பதியின் குழந்தைக்கு நேற்று பெயர் சூட்டு விழா நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி நடைபெற்ற இந்த விழாவில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்றனர்.

அதன்படி குழந்தைக்கு ‘க்ளின் காரா கொனிடேலா‘ என பெயர் வைத்துள்ளனர். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள நடிகர் சிரஞ்சீவி இது தொடர்பான புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version