யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளனர். அதில் ஒருவர் தான் டி.டி.எப்.வாசன். கோவையை சேர்ந்த இவர் அதிவேகமாக பைக் ஓட்டி அதன் வீடியோவை லைவ்வாக யூடியூபி-ல் பதிவு செய்வது வழக்கமாக வைத்திருந்தார். யூடியூபி-ல் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுமட்டுமல்லாமல் இவர் அதிவேக பயணம் காரணமாக பல வழக்குகளையும் சந்தித்துள்ளார். இவர் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகனாக என்ட்ரீ கொடுத்துள்ளார். இயக்குனர் செல்அம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தை தி பட்ஜெட் பிலிம் கம்பெனி தயாரிக்கிறது.
இதையடுத்து இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் டி.டி.எப்.வாசன் பிறந்த நாளான நேற்று வெளியானது. ‘மஞ்சள் வீரன்‘ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டரில் டி.டி.எப்.வாசன் கையில் சூலாயுதத்துடன் புல்லட் பைக்கில் சீறிப் பாய்வது போல இடம்பெற்றுள்ளது.
மேலும் முதல் தோற்ற போஸ்டரில் 299 கி.மீ. வேகத்தில் படப்பிடிப்பு ஆரம்பம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் கூல்சுரேஷ் குணசித்திர வேடத்தில் நடிக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
