முகப்பு சினிமா பிரபல தமிழ் ஹீரோவை காதலிக்கும் விமலா ராமன்

பிரபல தமிழ் ஹீரோவை காதலிக்கும் விமலா ராமன்

ஆஸ்திரேலியாவில் பிறந்த நடிகை விமலா ராமன் தமிழில் பாலசந்தரின் ‘பொய்‘ எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி நடிக்க ஆரம்பித்தார். மேலும், தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் நடித்துள்ளார். 42-வயதான விமலா ராமன் நேற்று(ஜன.24) தனது பிறந்தநாளை கொண்டாடினார். பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் அவர் தனது காதலருடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. அவர் வேறு யாருமில்லை. தமிழ் நடிகர் வினய் ராய்.

இவர் ‘உன்னாலே உன்னாலே‘  படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பின் பல படங்களில் நடித்தார். மேலும் துப்பறிவாளன், டாக்டர் மற்றும் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் வில்லனாகவும் நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். இந்நிலையில், வினய் ராயுடன் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு ‘எனது குடும்பம்‘ என பதிவிட்டுள்ளார். இவர்கள் இருவரும் 2011-ல் டேம் 999 படத்தில் ஒன்றாக நடித்தனர். பின்னர் இருவரும் தொடர்ந்து பல ஆண்டுகளாக நட்பில் இருந்து வந்துள்ளனர். விரைவில் அதிகாரபூர்வமாக இவர்களது காதல் வாழ்க்கையை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version