தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் வெற்றி, தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இதில் இவருடன் இணைந்து ஷிவானி நாராயணன், ஜி.பி.முத்து, தங்கதுரை உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தலைப்பு ‘பம்பர்‘ என வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை வேதா பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றன. மேலும் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்திலிருந்து டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதில் வரும் ஜூலை 7-ம் தேதியன்று இப்படம் வெளியாகும் என்று படக்குழுவினர்கள் போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.
