தமிழ் திரையுலகில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை பாலாம்பிகா. இவர் பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனிடம் உதவியாளராக இருந்த ராமசாமி என்பவரின் மகள் ஆவார்.
இவர் ‘பாலம்‘ என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘நடிகன்‘ படத்தில் குஷ்புவுக்கு தங்கையாகவும், ‘பாட்டுக்கு ஒரு தலைவன்‘ என்ற படத்தில் விஜயகாந்த் தங்கையாகவும், ‘திருமதி பழனிச்சாமி‘ படத்தில் சத்யராஜுக்கு தங்கையாகவும் நடித்துள்ளார்.
படங்களில் வாய்ப்புகள் குறைந்த நிலையில் சின்னத்திரை பக்கம் திரும்பிய பாலாம்பிகா, பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில் அதிர்ச்சி தரக்கூடிய தகவலை அளித்துள்ளார். அதில், “ அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கு இதில் உடன்பாடில்லை.
இப்படி சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு நமக்கு தேவையில்லை என அப்பா சொல்லிவிட்டார். விஜய் உடன் நான் நடித்திருந்தால் தற்போது என் வாழ்க்கை மாறியிருக்கும். எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. கணவர் சரியில்லை. அதனால் திருமண வாழ்க்கையை முடித்துக்கொண்டேன்.
நான் பல நாடுகளுக்கு சுற்றியிருக்கிறேன். நன்றாக சம்பாதித்தபோது கொஞ்சம் அதிகமாகவே ஆடிவிட்டேன். அதனால் அனைத்தையும் இழந்துவிட்டேன்.
கொரோனா சமயத்தில் கஷ்டப்பட்டபோது நடிகர் சத்யராஜை தொடர்பு கொண்டு உதவி கேட்டேன். அவர் என்னை வீட்டுக்கு அழைத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து உதவினார். விஜயகாந்தை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை “ என்று கூறியுள்ளார். பாலாம்பிகாவின் இந்த பேட்டி தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
