முகப்பு அண்மை செய்திகள் படப்பிடிப்பிற்கு செல்ல பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பிரபல பாலிவுட் நடிகர்

படப்பிடிப்பிற்கு செல்ல பைக்கில் லிப்ட் கேட்டு சென்ற பிரபல பாலிவுட் நடிகர்

பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப் பச்சன் வயது 80 எட்டிய நிலையிலும் பிஸியாக நடித்து வருகிறார். பொதுவாக படப்பிடிப்பு தளத்திற்கு நேரம் தவறாமல் செல்லக்கூடியவர் அமிதாப்.

அப்படிதான் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக தனது வீட்டில் இருந்து காரில் சென்றார். ஆனால் எதிர்பாராதவிதமாக கடும் போக்குவரத்து நெரிசலில் அவர் மாட்டிக் கொண்டார்.

இதனால் படப்பிடிப்புக்கு நேரத்திற்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக  காரை விட்டு இறங்கிய அமிதாப், சாலையில் சென்ற ஒருவரிடம் பைக்கில் லிப்ட் கேட்டு படப்பிடிப்புக்கு சென்றார்.

இந்நிலையில் இதுதொடர்பான போட்டோவை பகிர்ந்துள்ள அமிதாப், “ நீங்கள் யார் என்று தெரியாது. ஆனாலும் என்னை படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு உரிய நேரத்தில் டிராபிக் சிக்கல்களை தவிர்த்து கொண்டு வந்து சேர்த்தீர்கள்.

ரைடுக்கு நன்றி நண்பா. தொப்பி, ஷார்ட்ஸ், மஞ்சள் நிற டி-சர்ட் அணிந்த உங்களுக்கு நன்றி“ என தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version