தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை காஜல் அகர்வால். இவர் ‘பொம்மலாட்டம்‘ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ‘பழனி, மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, அல் இன் அல் அழகுராஜா, ஜில்லா, மாரி, பாயும் புலி, விவேகம், மெர்சல்‘ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் தற்போது கமல்ஹாசனுடன் இணைந்து ‘இந்தியன் 2‘ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் 2020-ம் ஆண்டு தொழிலாதிபர் கவுதம் கிச்சலுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இவர் தற்போது நடிப்பது மட்டும் இல்லாமல் சொந்தமாக ‘காஜல் பை காஜல்‘ என்ற பெயரில் அழகு சாதனப்பொருள் நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் இதைப்பற்றி பேசிய காஜல், “என் கணவர் உதவி இல்லாமல் இந்த தொழிலை என்னால் தொடங்கி இருக்க முடியாது. அவர்தான் என்னை ஊக்கப்படுத்தினார்.
எப்போதும் ஒரே வருமானத்தை நம்பி இருக்கக் கூடாது என்று அவர்தான் அடிக்கடி சொல்வார். அழகு சாதனப் பொருட்களில் முக்கியமானது கண் அழகு சாதனங்கள் தான்.
அவை பாதுகாப்பானதாக இல்லை என்றால் பல பிரச்சினைகள் ஏற்படும். இதனால் பாதுகாப்பான கண் அழகு சாதன பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இதனை தொடங்கி உள்ளேன்“ என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.
