முகப்பு அண்மை செய்திகள் நடிகை தமன்னா வெளியிட்ட ‘ஜெயிலர்‘ பட அப்டேட்

நடிகை தமன்னா வெளியிட்ட ‘ஜெயிலர்‘ பட அப்டேட்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்‘. இதில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், தமன்னா, மிர்னா, ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியன்று வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் தற்போது டப்பிங் பேசி வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் தமன்னாவின் அறிமுக பாடல் மட்டும் படமாக்க வேண்டி உள்ளது. அந்த பாடலுக்கான ஒத்திகை இப்போது நடைபெற்று வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை தமன்னா.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version