முகப்பு அண்மை செய்திகள் ‘காசு கொடுத்தால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்‘ – ஸ்ட்ரிட்டாக சொல்லிய பிரபல நடிகர்

‘காசு கொடுத்தால் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன்‘ – ஸ்ட்ரிட்டாக சொல்லிய பிரபல நடிகர்

சினிமாவை பொறுத்தவரை பெரிய நட்சத்திரங்களின் படம் அல்லது படங்கள் பிரமாண்டமாக எடுக்கப்பட்டாலும் அந்த படத்திற்கு புரமோஷன் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும்.

இந்த புரமோஷன் நிகழ்ச்சிகள் தான் படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு வகிக்கின்றன. பெரும்பாலான படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் படத்தின் கதாநாயகிகள் மற்றும் ஒரு  சில படங்களில் கதாநாயகர்கள் கலந்து கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கதாநாயகனாக அறிமுகமாகி தற்போது பிஸியான வில்லனாக நடித்து வரும் நடிகர் வினய் ராய் தான் நடிக்கும் சில படங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ஆனால் ஒரு சில படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

இது ஏன் என்பது குறித்து தற்போது ஒரு பேட்டியில் விளக்கமளித்துள்ளார். அதில், “புரமோஷன் என்பதும் படம் தொடர்பான ஒரு வேலை தான் என்றாலும், அதற்காக தனியாக நேரம் ஒதுக்கி மெனக்கெட வேண்டியிருக்கிறது. அதனால் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு என தனியாக ஊதியம் வழங்கினால் மட்டுமே அந்த படத்தில் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன்.

அப்படி தங்களது ஒப்பந்தத்தில் இதுகுறித்து குறிப்பிடாமல் புரமோஷனில் கலந்து கொள்ள சொன்னால் ஸ்ட்ரிக்ட்டாக மறுத்து விடுகிறேன்“ என்று கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version