முகப்பு அண்மை செய்திகள் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகையின் மகள்

தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைக்கும் பிரபல நடிகையின் மகள்

 

 

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக ‘காத்துவாக்குல ரெண்டு காதல்‘ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நயன்தாரா, சமந்தா, விஜய்சேதுபதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் விக்னேஷ் சிவனின் கதையை அஜித்துக்கு பிடிக்கததால் அவர் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இந்த செய்தி விக்னேஷ் சிவனுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.

இந்நிலையில் தற்போது ‘லவ்டுடே‘ படத்தின் மூலம் பிரபலமான பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை கமல்ஹாசனுக்கு சொந்தமான ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதில் கதாநாயகியாக நடிக்க மறைந்த முன்னணி நடிகை ஸ்ரீதேவியின் மகளும், இந்தி நடிகையுமான ஜான்வி கபூரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இவர் தற்போது தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்.டி.ஆரின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version