முகப்பு அண்மை செய்திகள் ஜி.வி. நடிக்கும் ‘கள்வன்‘ பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

ஜி.வி. நடிக்கும் ‘கள்வன்‘ பட போஸ்டரை வெளியிட்ட தனுஷ்

இசையமைப்பாளர், நடிகர் என இருவழிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது பி.வி சங்கர் என்ற புதுமுகம் இயக்கியுள்ள ‘கள்வன்‘ என்ற படத்தில் நடித்திருக்கிறார். அவருடன் இயக்குனர் பாரதிராஜாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.  காடும் காடு சார்ந்த பகுதிகளில் நடக்கும் திரில்லர் சம்பவங்களை மையமாகக் கொண்ட கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் ப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

ஒரு நிமிடத்திற்கு மேல் ஓடக்கூடிய இந்த  வீடியோவை நடிகர் தனுஷ் வெளியிட்டு இருக்கிறார். இப்படம் 2023ம் ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வர இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தங்கர் பச்சான் இயக்கி உள்ள ‘கருமேகங்கள் கலைகின்றன‘ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இயக்குனர் பாரதிராஜா, இந்த ‘கள்வன்‘ படத்திலும் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு இணையான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version