முகப்பு அண்மை செய்திகள் சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்

சூர்யாவுடன் இணைந்த பிரபல நடிகர்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா‘. இதில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் தயாரித்து வரும் நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் ‘கங்குவா‘ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இதையடுத்து சூர்யாவின் பிறந்தநாள் அன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. இந்நிலையில் சூர்யா 43 படத்தின் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அதன்படி இப்படத்தை இயக்குனர் சுதா கொங்கரா இயக்க இருப்பதாகவும், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version