முகப்பு அண்மை செய்திகள் “சினிமா வெறும் பொழுதுபோக்கு‘‘ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

“சினிமா வெறும் பொழுதுபோக்கு‘‘ இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பேட்டி

விக்ரம் படத்தை அடுத்து விஜய் நடிக்கும் 67-வது படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என பலர் நடிக்கிறார்கள். வருமான வரித்துறை சார்பில் கோவையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அப்போது அவர் மீடியாக்களை சந்தித்தபோது, சினிமாவை ரசிகர்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டுமே பார்க்க வேண்டும். தங்களது உயிரையும் விடும் அளவுக்கு எல்லாம் சினிமாவில் ஒன்றுமில்லை. அதனால் அனைத்து ரசிகர்களும் கவனமாகவும் பொறுப்புடனும் நடந்து கொள்ள வேண்டும். தற்போது தளபதி 67-வது படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.  இன்னும் பத்து நாட்களில் புதிய அப்டேட் எதிர்பார்க்கலாம் என்றார். மேலும் தமிழ்நாடா? தமிழகமா? என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, தமிழ்நாட்டை எப்போதும் தமிழ்நாடு என்று சொல்ல விரும்புவேன் என்றார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version