முகப்பு அண்மை செய்திகள் சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகை

சினிமாவை விட்டு விலகும் பிரபல நடிகை

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் என்னும் நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இதனால் கிட்டத்தட்ட 8 மாத காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டு இருந்த சமந்தா தனது உடல் நிலையை சரி செய்து கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

அந்த வகையில் இவரின் நடிப்பில் சமீபத்தில் ‘யசோதா, சாகுந்தலம்‘ படங்கள் வெளியாகின. ஆனால் அந்தப் படங்கள் அவருக்கு பெரிய அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தற்போது ‘குஷி‘ படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சிட்டாடல் வெப்சீரிஸிலும் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை சமந்தா திடீரென நடிப்புக்கு ஒரு குட்டி பிரேக் விடப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. கணவர் நாக சைதன்யாவை பிரிந்துவிட்டு தனியாக வாழ்ந்து வரும் சமந்தா பாலிவுட், ஹாலிவுட் என பெரிய நடிகையாக வலம் வர ஆசைப்பட்டார்.

ஆனால் திடீரென அவரை தாக்கிய மயோசிடிஸ் என்னும் அரிதான நோய் பாதிப்பு அவரை நிலைகுலைய செய்தது. சுமார் 8 மாத காலம் நடிக்கவே முடியாமல் எழுந்து நடக்கவும் முடியாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சமந்தா ‘யசோதா‘ படத்தின் ரிலீஸ் சமயத்தில் தான் பட்ட வேதனைகளை வெளிப்படையாக பேசி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது புதிதாக எந்தவொரு படங்களிலும் கமிட் ஆகவில்லை. அதே போல சில படங்களில் நடிக்க சமந்தா ஒப்புக் கொண்டிருந்த நிலையில், அந்த படங்களின் அட்வான்ஸையும் அவர் திருப்பிக் கொடுத்து விட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு பின்னணியில் என்ன காரணம் என விசாரணைகள் கிளம்பிய போது தான் நடிகை சமந்தா நடிப்பதிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன. நடிகை சமந்தா புதிதாக எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றும் இன்னும் ஒரு வருடத்திற்கு ஓய்வெடுத்து தனது உடல்நிலையை முழுவதுமாக சரி செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நடிகை சமந்தாவின் உடல்நிலை சீக்கிரமாக பரிபூரணமாக குணமடைய வேண்டும் என்றும் அவர் எப்போதும் சந்தோஷாமாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருந்தாலே எங்களுக்கு போதும் என அவரது ரசிகர்கள் சோஷியல் மீடியாக்களில் நடிகை சமந்தாவுக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version