முகப்பு அண்மை செய்திகள் ‘குஷி‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

‘குஷி‘ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகை சமந்தாவின் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘சாகுந்தலம்‘. பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகிறது. இதையடுத்து ‘குஷி‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டா நாயகனாக நடிக்கும் இதை ஷிவா நிர்வனா இயக்குகிறார். இப்படம் காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது. இந்த படம் ஆரம்பித்த சமயத்தில் தான் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சில மாதங்களாக அவர் சிகிச்சை மேற்கொண்டதால் இதன் படப்பிடிப்பு தடைப்பட்டு வந்தது.

தற்போது நோயிலிருந்து மீண்டு வந்துள்ள சமந்தா மீண்டும் இதன் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் வரும் செப்டம்பர் 1-ல் படம் ரிலீஸாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு போஸ்டரையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version