முகப்பு அண்மை செய்திகள் இயக்குனர் ராஜமவுலியை விமர்சித்த நடிகை காஞ்சனா

இயக்குனர் ராஜமவுலியை விமர்சித்த நடிகை காஞ்சனா

பழம்பெரும் நடிகை காஞ்சனா. இவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், என்.டி.ராமராவ், நாகேஷ்வரராவ், கிருஷ்ணா உள்ளிட்ட அந்த கால முன்னணி நடிகர்களுடன் நடித்தவர். திருப்பதி கோவிலுக்கு சென்னையில் இருந்த பல கோடி மதிப்புள்ள தனது சொந்த நிலத்தை கொடுத்தவர். தற்போது குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பாகுபலி, ஆர்ஆர்ஆர், போன்ற பிரமாண்ட படங்கள் எடுத்த பிரபல டைரக்டர் ராஜமவுலியை காஞ்சனா விமர்சித்து உள்ளார். இது குறித்து காஞ்சனா அளித்துள்ள பேட்டியில், “பாகுபலி படம் எடுத்தபோது அந்த படத்தின் இயக்குனரான ராஜமவுலி என்னை அணுகி இரண்டு நாள் நடிக்க கால்ஷீட் கேட்டார்.

அதற்கு நான் ஐந்து லட்சம் ரூபாய் சம்பளம் கேட்டேன். அந்த கதாபாத்திரத்திற்கு அவ்வளவு கொடுக்க முடியாது என்று சொல்லி என்னை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டார். என்னை போன்ற ஒரு சீனியர் நடிகைக்கு ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்க முடியாத நிலையில் ராஜமவுலி  இருக்கிறாரா? ஐந்து லட்சம் என்பது அவருக்கு பெரிய தொகையா. என்னை போன்ற நடிகைக்கு கொடுத்தால் எவ்வளவு பேருக்கு உபயோகப்படும். ஏன் கொடுக்கவில்லை“ என்று கேட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version