முகப்பு அண்மை செய்திகள் ஓடிடியில் ‘துணிவு‘ படத்தின் வெற்றியை முறியடிக்குமா ‘வாரிசு‘?

ஓடிடியில் ‘துணிவு‘ படத்தின் வெற்றியை முறியடிக்குமா ‘வாரிசு‘?

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான படம் ‘வாரிசு‘. இப்படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி  இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் தியேட்டர்களில் வெளியானது. இது சுமார் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இந்நிலையில் நேற்று (பிப்ரவரி.22) இப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர். மேலும் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் படம் வெளியாகியுள்ளது.

தமிழில் ‘வாரிசு‘, தெலுங்கில் ‘வாரசுடு‘ என்னும் தலைப்பில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் மலையாளத்தில் ‘வம்ஷாஜன்‘ மற்றும் கன்னடத்தில் ’வாரஸ்டரா‘ என்னும் தலைப்பில் வெளியாகியுள்ளது. அதே வேளையில் அஜித்தின்  ‘துணிவு‘ படம் ஓடிடியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் ‘வாரிசு‘ படமும் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்திற்கு எப்படி வரவேற்பு கிடைக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் துணிவு படம் ஒடிடியில் படைத்த சாதனை வாரிசு முறியடிக்குமா என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version