முகப்பு அண்மை செய்திகள் பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் சுற்றுலா சென்ற தம்பதி!

பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் சுற்றுலா சென்ற தம்பதி!

பேருந்தை சொகுசு வீடாக மாற்றி உலகம் முழுவதும் சுற்றுலா சென்று வரும் ஜெர்மன் தம்பதி மாமல்லபுரத்தில் இயற்கை அழகைக் கண்டு ரசித்தனர். சமையலறை, குளியலறை, படுக்கையறை, தம்பதியின் 2 குழந்தைகள் படிப்பதற்கான தனி அறைகள் என சொகுசு வசதிகளுடன் பேருந்தை மாற்றியுள்ளனர்.

கடந்த 2022- ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி துபாயில் இருந்து பயணத்தைத் தொடங்கி, உலகம் முழுவதும் சுற்றி வரும் ஜெர்மனி நாட்டின் தலைநகர் பெர்லினைச் சேர்ந்த நினா (Nina) மற்றும் காய் (Kai Schakat) தம்பதி பாகிஸ்தானின் வாகா எல்லை வழியாக இந்தியாவிற்குள் நுழைந்தன. பல மாநிலங்களைக் கடந்து மாமல்லபுரம் வந்துள்ளனர்.

அடுத்ததாக நேபாளம், தாய்லாந்து, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் வழியாக சென்று அமெரிக்காவில் பயணத்தை நிறைவுச் செய்யவுள்ளதாகக் கூறினர்.

அந்த தம்பதி மாமல்லபுரத்தில் அர்ஜுனன் தபசு, ஐந்து ரதம், வெண்ணெய் உருண்டை பாறை, கடற்கரை கோயில் ஆகியவற்றைக் கண்டு ரசித்தனர். மாமல்லபுரம் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள், ஜெர்மனி தம்பதியின் பேருந்தைச் சுற்றிப் பார்த்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version