முகப்பு அண்மை செய்திகள் இந்திரகாந்தி வாழ்க்கையை படமாக்க நினைத்து அனைத்து சொத்தையும் அடகு வைத்த பிரபல நடிகை…!

இந்திரகாந்தி வாழ்க்கையை படமாக்க நினைத்து அனைத்து சொத்தையும் அடகு வைத்த பிரபல நடிகை…!

 

தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘தாம்தூம்‘ படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் நடிகை கங்கனா ரணாவத். மேலும் ‘தலைவி‘ படத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். தற்போது ‘எமர்ஜென்சி‘ என்ற படத்தை இயக்கி தயாரிக்கிறார்.  இந்த படம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகிறது. இதில் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கிறார். இப்படத்தை தயாரிப்பது குறித்து கங்கனா ரணாவத் கூறியதாவது, “நான் சொந்தமாக ஒரு ஓட்டல் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் பொருளாதார பிரச்சினையால் அது நிறைவேறாமல் போனது.

தற்போது நான் வசிக்கும் வீடு உள்பட விலைமதிக்கத்தக்க பொருட்கள் அனைத்தையும் அடமானம் வைத்து எமர்ஜென்சி படத்தை தயாரித்து வருகிறேன். ஆரம்ப காலத்தில் நான் கையில் வெறும் 500 ரூபாயோடு மும்பை வந்தேன். ஒரு வேளை இந்த படத்தில் நான் முதலீடு செய்த  மொத்தத்தையும் இழக்க வேண்டி வந்தால் மும்பை வந்தபோது எந்த நிலையில் இருந்தேனோ அதே நிலைக்கு சென்று விடுவேன். ஆனாலும் தன்னம்பிக்கையை இழக்கமாட்டேன். சொந்த காலில் தான் நிற்பேன்“ என்று நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.

 

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version