முன்னணி நடிகரான கார்த்திக் நடித்த ‘விருமன்‘ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி. அவர் நடித்த முதல் படமே அவருக்கு வெற்றியை தேடி தந்தது. அதையடுத்து தற்போது சிவகார்த்திகேயன் உடன் இணைந்து ‘மாவீரன்‘ படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், அப்படத்தை தொடர்ந்து அவர் விஷ்ணுவர்தன் இயக்கி வரும் புதிய படத்திலும் நாயகியாக நடிக்க உள்ளார். இப்படத்தில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி நாயகனாக நடிக்கிறார். சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படத்தை குறித்த அதிகராப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
