முகப்பு அண்மை செய்திகள் இந்திய சாதனையாளர் விருதை பெற்ற நடிகை ‘ஸ்ருதிஹாசன்‘

இந்திய சாதனையாளர் விருதை பெற்ற நடிகை ‘ஸ்ருதிஹாசன்‘

ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘ஏழாம் அறிவு‘ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன். கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் இந்த படத்திற்கு முன்பே ஹிந்தி மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் சினிமாவில் பாடகியாக, இசை அமைப்பாளராக மற்றும் சமூக சேவகி என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார்.

இவர் தமிழில் விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.  இதேபோல் தெலுங்கிலும் இவர் வயது வேறுபாடின்றி முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் பாலகிருஷ்ணாவுடன் ‘வீர சிம்ஹா ரெட்டி‘ மற்றும் சிரஞ்சீவியுடன் ‘வால்டர் வீரய்யா‘ என முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்த படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து கே.ஜி.எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகும் ‘சலார்‘ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகர் பிரபாஸ் நடிக்கிறார்.

இந்நிலையில் ஸ்ருதிஹாசனுக்கு டில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் பவர் காரிடார்ஸ்(பிசி)  இந்திய சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த விருதை வழங்கினார். இது பல்வேறு களங்களில் இருந்து தேசத்திற்கு சேவை செய்ய முன்வந்த குடிமக்களின் முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரித்து வழங்கப்படும் விருதாகும். விருது பெற்றது குறித்து ஸ்ருதிஹாசன் கூறும்போது, ‘‘இந்த விருதைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், அதற்காக நான் நடுவர்களுக்குப் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். கலைப் பணிக்காக பாராட்டப்படுவது எப்போதுமே பணிவானது. முக்கியமான விஷயங்களுக்கு எனது தளத்தைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன்‘‘, என கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version