தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘வாத்தி‘. இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
‘வாத்தி‘ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை லலித்தின் 7 ஸ்க்ரீன் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. நேரடியாக தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வருகின்ற பிப்ரவரி 17-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த தனுஷ் திட்டமிட்டுள்ளார். சென்னை சாய்ராம் கல்லூரியில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வருகிற பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற இருக்கிறது.
