இயக்குனர் ராமின் ‘கற்றது தமிழ்‘ மூலம் அறிமுகமாகி ‘அங்காடித் தெரு‘ மூலம் பிரபலமாகி, தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை அஞ்சலி. தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளாலும், அவர் நடித்த படங்கள் சரியாக போகாததினாலும், அவரது மார்க்கெட் சற்று குறைந்தது. இருப்பினும் மனம் தளராமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார் அஞ்சலி.
அந்த வகையில் தற்போது மீண்டும் இயக்குனர் ராம் இயக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை‘ படத்தில் நிவின்பாலிக்கு ஜோடியாக நடித்துள்ள அஞ்சலி, ஷங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களைப் பெரிதும் நம்பியிருக்கும் அஞ்சலி, படம் வெளியானால் தனது மார்க்கெட் மீண்டும் உயரும் எனவும், தமிழ் மற்றும் தெலுங்கில் கவனிக்கப்படும் ஹீரோயினாக மாறுவேன் என்றும் குஷியில் உள்ளராம். அதன் காரணமாகத் தனது சம்பளத்தை அஞ்சலி உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
