இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் தற்போது ஹிப் ஹாப் ஆதியின் நடிப்பில் ‘வீரன்‘ என்னும் படத்தை இயக்கி வருகிறார். இவர் ‘மரகத நாணயம்‘ என்னும் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் அதீரா ராஜ், முனீஸ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தற்போது படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இது ஒரு சூப்பர் ஹீரோ மாதிரியான கதை.
இந்நிலையில் படக்குழு இந்த படத்தின் ரிலீஸ் தேதியை குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த படம் வருகின்ற ஜூன் 2 அன்று உலகமெங்கும் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
