தமிழ் சினிமாவின் எண்பது காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் மூத்த நடிகை லெஷ்மியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால் அவருக்கான சரியான கதாபாத்திரம் கிடைக்காததால் தற்போது வருமானத்திற்காக சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தியும் ஹோம் பேஸ்ட் பிஸினஸாக சோப் மற்றும் அழகு சாதன பொருட்களை விற்பனை செய்தும் வருகிறார். இந்நிலையில் பிஸினஸிற்காக தனது நம்பரை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்த ஐஸ்வர்யாவுக்கு சிலர் அன்-டைமில் அசிங்கமாக மெசேஜ் செய்து டார்ச்சர் செய்துள்ளனர்.
இந்த வயதிலும் ஐஸ்வர்யா கவர்ச்சியாக இருப்பதாக ஆபாசமாக பேசி படுக்கைக்கு அழைத்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த ஐஸ்வர்யா, தனது யூ-டியூப் சேனலில் தனக்கு தவறாக மெசேஜ் அனுப்பும் நபர்களின் பெயரை வெளியிட்டு அவர்களை கிழி கிழியென கிழித்துள்ளார். மேலும் சில ஸ்கிரீன்ஷாட்டுகளையும் காண்பித்து அவர்களை அம்பலப்படுத்தியுள்ளார். இந்நிலையில் ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பலரும் ஸ்டேண்ட் வித் ஐஸ்வர்யா என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
