இயக்குனர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் என புது முகங்கள் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘யாத்திசை‘.
சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான இப்படம் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய கதை கருவை மையமாக கொண்டு உருவானது.
குறைந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு படமா என பலரும் பாராட்டினர். இப்படம் விமர்சகர்கள் மற்றும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் ‘யாத்திசை‘ படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியது. இதையடுத்து இந்த படம் இன்று(மே.13) அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
