நடிகர் கவின் சின்னத்திரையில் பிரபலமாகி வெள்ளித்திரையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர். இவர் தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டாடா‘ படம் பெரும் வெற்றியையும், வசூலையும் பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் புதுப்படம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த படம் கொஞ்சம் தள்ளி போவதால் உடனடியாக இன்னொரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்டார் என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. ரைஸ் புரொடக்ஷன்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றனர்.
விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
