தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கவின். சில மாதங்களுக்கு முன் அவர் நடிப்பில் வெளிவந்த படம் ‘டாடா‘. இப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக மாறியது.
இப்படத்தை தொடர்ந்து அவர் பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் என தகவல் பரவியது. இந்நிலையில் இன்று(மே 26) இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
கவினின் 4-வது படத்தை நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நடிகை பிரீத்தி அன்சாரி நடிக்கிறார். நடிகை பிரீத்தி அன்சாரி ‘அயோத்தி‘ பட மூலம் மக்களிடையே பிரபலமானவார். இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்து வரும் நிலையில், அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த பூஜையில் இயக்குனர் மிஷ்கின் கலந்துகொண்டுள்ளார். இப்படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். இளைஞர்களை கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாக உள்ளது.
