எண்பது மற்றும் தொண்ணூறுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை தேவையானி. இவர் ஆரம்பகாலத்தில் சினிமாவில் நடிக்க வந்தபோது இவர் நடித்த எந்த படமும் ஹிட் ஆகவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நடிகை தேவையானி சினிமாவை விட்டு விலகி விடலாம் என நினைத்த போது ‘காதல் கோட்டை‘ படம் தான் அவருக்கு மறுவாழ்வு கொடுத்ததாக நடிகை தேவையானி கூறியுள்ளார்.
இது குறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், “காதல் கோட்டை படம் தன்னிடம் வந்தது. இந்த படம் ஓடவில்லை என்றால் சினிமாவை விட்டு விலகிவிடுவோம் என்று நினைத்தேன். அந்த படத்திற்காக கடினமாக உழைத்தேன். ஆனால், நினைத்ததைவிட அந்த படம் பெரிய ஹிட் ஆனதால், அதன்பின் பெரிய பட வாய்ப்புகள் வந்தது“ என கூறியுள்ளார்.
