முகப்பு அண்மை செய்திகள் பாலியல் தொல்லை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

பாலியல் தொல்லை குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் தமிழில் சூர்யா, விஜய், தனுஷ் என அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் மும்பையை சேர்ந்த தொழிலாளதிபர் சோஹைல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகு பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் தெலுங்கு நடிகர்  ஒருவர் தன்னை டேட்டிங்கிற்கு அழைத்து துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், அந்த நடிகருக்கு சரியான பாடம் புகட்டியதாகவும் ஹன்சிகா ஒரு பேட்டியில் தெரிவித்ததாக ஒரு செய்தி வைரலாக பரவியது.

இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து உடனடியாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் நடிகை ஹன்சிகா. அதில் அவர் கூறியதாவது, “ இது போன்ற ஒரு விஷயத்தை நான் பேசவே இல்லை, எந்த ஒரு செய்தியாக இருந்தாலும் அதை வெளியிடுவதற்கு முன்பு உண்மை  தன்மையை அறிந்து அதன் பின்பு வெளியிடவும் என அதிரடியாக பதிலளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Exit mobile version